வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (15:04 IST)

மணிரத்னம் படத்தில் நடிக்க விரும்பும் நிர்வாண போஸ் நடிகை

ஷெர்லின் சோப்ராவின் வார்த்தைகளும், அவர் தரும் போஸ்களும் எப்போதுமே சர்ச்சையை எழுப்புகிறவை. ப்ளேபாய் பத்திரிகையில் நிர்வாண போஸ் தந்த கையோடு இந்த போஸுக்காக எனக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று இந்தியாவையே அலற வைத்தவர்.
இவர் நடித்த கமாசூத்திரா 3டி இந்த வருடம் வெளியாகிறது. இந்தப் படத்தை முன்னிட்டு ஷெர்லினும், பட இயக்குனரும் வார்த்தையால் அடித்துக் கொண்டதை புத்தகமாகப் போட்டால் சரோஜாதேவிக்கு டஃப் பைட் கொடுக்கலாம். 
 
வடக்கே வாள் வீச்சு நடத்திக் கொண்டிருந்தவர் தெற்கேயும் கால் பதிக்கிறார். படம் பேட் கேர்ள்.
 

மெலினா திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே டிவிடி வாங்கி பார்த்துவிடவும். சினிமா பாரடைஸோ, ஸ்டார் மேக்கர் போன்ற சிறந்த படங்களை இயக்கிய குஸாபே டர்னதோர் 2000ல் இயக்கிய இப்படம் மோனிகா பெலூசியை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தது. இந்தப் படத்தை தழுவி மலையாளத்தில் எடுக்கிற படம்தான் பேட் கேர்ள். மோனிகா பெலூசி நடித்த வேடத்தில் ஷெர்லின் சோப்ரா.
 
தமிழில் ஷெர்லினை நடிக்க வைக்கவும் முயற்சி நடக்கிறது. அவருக்குப் பிடித்த, நடிக்க விரும்புகிற இயக்குனர் மணிரத்னம்தானாம்.
 
மணிரத்னம் புதிய படம் இயக்குவது ஷெர்லினுக்கு தெரியுமா...?