வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (17:50 IST)

மஞ்சப்பை விளம்பரம், கோபத்தில் லட்சுமிமேனன்

மஞ்சப்பை படத்தை ராஜ்கிரணை முன்னிறுத்தி விளம்பரம் செய்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் விளம்பரங்களிலும் அவரே பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்ள ஹீரோ விமல் ஓரமாக வருகிறார். சரி, ஹீரோயின் லட்சுமி மேனன்...?
மஞ்சப்பை விளம்பரங்களைப் பொறுத்தவரை அவரை மொத்தமாக ஓரங்கட்டியிருக்கிறார்கள். 
 
ராஜ்கிரணுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பு உள்ளது. மஞ்சப்பை கதையும் தாத்தா, பேரனை மையப்படுத்தியது. முக்கியமாக தாத்தா ராஜ்கிரணை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் தந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கிறார்கள். ஆனால் விளம்பரங்களில் தன்னை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்கள் என கோபத்தில் இருக்கிறார் லட்சுமி மேனன். அவர் அப்படி நினைக்க காரணம் இருக்கிறது.
 
படிக்கப் போறேன், பரீட்சை எழுதப் போறேன் என்று மஞ்சப்பை விளம்பர நிகழ்ச்சிகளில் லட்சுமி மேனன் கலந்து கொள்ளவில்லையாம். அதனை மனதில் வைத்தே விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று நினைக்கிறார் லட்சுமி மேனன். 
 
எப்படியோ... இந்த ஹிட் லட்சுமி மேனன் ராசியான நடிகை என்ற பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதற்காக அவர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.