வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (18:18 IST)

மஞ்சப்பை படத்துக்கு யு சான்றிதழ்

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் மஞ்சப்பை படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
யு சான்றிதழ் இருந்தால் மட்டுமே வரி விலக்கு சலுகை என்பதால் கடந்த வருடங்களில் சென்சார் சான்றிதழ் வாங்குவது தயாரிப்பாளர்களுக்கு பரீட்சை எழுதுவது போலாகிவிட்டது. யு சான்றிதழ் கிடைத்தால் வெற்றி இல்லையேல் தோல்வி.
 
விமல், லட்சுமிமேனன் நடித்துள்ள மஞ்சப்பை தேர்வில் வெற்றி பெற்றுள்ளது.
 
அறிமுக இயக்குனர் நவீன் ராகவன் மஞ்சப்பையை இயக்கியுள்ளார். முக்கிய வேடத்தில் ராஜ்கிரணும், பிரதாப்போத்தனும் நடித்துள்ளனர். மலையாளத்தில் தொடர்ச்சியாக நடிக்கும் பிரதாப்போத்தன் அரிதாகவே தமிழ் சினிமாவில் தென்படுகிறார். மஞ்சப்பைக்கு இசை டி.இமான்.
 
மே மாதம் படம் திரைக்கு வருகிறது.