வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (08:01 IST)

மக்கள் கவி்ஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆவணப்பட வெளியீட்டு விழா

தமிழ் சமூகத்தின் மோசமான குணங்களில் ஒன்று ஆவணப்படுத்தும் தன்மை இல்லாதது. தமிழில் வெளியான படங்கள் எவை என்பது குறித்தே நம்மிடம் சரியான ஆவணங்கள் கிடையாது. இருப்பதை பராமரிக்கும் வழக்கமும் நமக்கில்லை. தனி மனிதர்கள் சிலரின் முயற்சிகள்தான் ஆவணப்படுத்துதல் என்ற வழக்கத்தை தமிழில் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
தனது 29 வயதில் இறந்து போன மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நல்ல புகைப்படம் ஒன்றுகூட நம்மிடம் இல்லை. இந்நிலையில் அவரைப் பற்றிய ஆவணப்படத்தை 7 ஆண்டுகள் உழைப்பில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பு.சாரோன். 
பட்டுக்கோட்டையாரின் பால்ய நண்பர் ஓவியர் ராமச்சந்திரன் நண்பர்களுடன் கவி்ஞரின் நினைவுகளை அசைபோடுவதாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் சினேகன் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மக்கள் கவி்ஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆவணப்பட வெளியீட்டு விழா!