மகன் இசையில் பாடும் அப்பா

Deva
Webdunia
தேவா ஒரு காலத்தில் பரபரப்பாக இசையமைத்துக் கொண்டிருந்தார். அவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். இசையமைப்பின் டிரெண்ட் மாற அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா தற்போது இசையமைப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் உருவாகும் "பழனி" படத்திற்கு ஸ்ரீகார்ந்த் தேவா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு அசத்தலான ஒரு ஓபனிங் பாடல் வருகிறதாம். பழனி வேல்முருகனைக் குறிக்கும் அந்தப் பாடலை உஜ்ஜஸ்தாயியில் பாடியிருப்பவர் இசைப்பாளர் தேவா. மகனுடைய இசையில் பிரமாதமாகப் பாடி அசத்தியிருக்கிறாராம்.

Webdunia|
இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெரும் என்கிறார் படத்தின் இயக்குனர் பேரரசு.


இதில் மேலும் படிக்கவும் :