வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 31 மே 2014 (13:53 IST)

மகன்களுடன் நடித்த ஜெயப்பிரகாஷ்

தயாரிப்பாளராக படங்கள் தயாரித்து நஷ்டக்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயப்பிரகாஷை நடிகராக்கியவர் இயக்குனர் சேரன். தற்போது தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்கிறார். இவர் சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் படம் ஐவராட்டம்.
 
கால்பந்து விளையாட்டு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக விளையாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஓணப்பந்து என்ற பெயரில் பந்தை காலால் உதைத்து விளையாடும் விளையாட்டு பிரபலம். சிவகங்கை மாவட்டத்தில் இதன் பெயர் ஐவராட்டம். ஐந்து பேர் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டு என்பதால் இந்தப் பெயர்.
உள்ளூர் விளையாட்டுகளை உற்சாகப்படுத்தும் படங்கள் தற்போது தொடர்ந்து வருகின்றன. அதுபோன்றதொரு உற்சாகப்படுத்தும் முயற்சிதான் இந்த ஐவராட்டம் என்கிறார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கும் மிதுன் மாணிக்கம்.
 
இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷுடன் அவரது இரு மகன்கள் - நிரஞ்சன், துஷ்யந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைவது இதுதான் முதல்முறை.
 
சுப செந்தில் பிக்சர்ஸ் தயாரிக்க சுவாமிநாதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.