1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2014 (16:19 IST)

போதும் 9 டூ 5 போராட்டம், தேவை நிறைய நீரோட்டம்

அனேகன் படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
 
சி.எஸ்.அமுதனின் முதல் படமான தமிழ்ப் படத்தில் அர்த்தமே இல்லாத வார்த்தைகளைப் போட்டு ஒரு பாடல் இடம்பெற்றது. அதில் பெரும்பாலான வார்த்தைகள் (ஒயமசீமா போன்றவை) ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாடல்களில் ஹம்மிங்குக்காக பயன்படுத்தியவை. 
 
இந்நிலையில் கே.வி.ஆனந்திடமிருந்து அமுதனுக்கு அழைப்பு வந்துள்ளது. அமுதனுக்கு ஏற்ற சிச்சுவேஷன் சொல்லி பாடல் எழுதித்தர கேட்டுள்ளார். ஐந்து நா‌ட்கள் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆறாவது, ஏழாவது நா‌ட்களில் புதுசேச்ரி, மகாபலிபுரம் என்று ஓய்வு கொள்ளவும் தாக சாந்தி செய்யவும் கிளம்பிவிடுகிறார்கள். அதுதான் பாடலுக்கான சிச்சுவேஷன். 
 
அமுதனுக்கு ஏற்ற சிச்சுவேஷன் என்பதால் புகுந்து புறப்பட்டிருக்கிறார். அந்த அதிரி புதிரி பாடல் இப்படி ஆரம்பிக்கிறது.
 
போதுமடா சாமி
நைன் டூ பைவ் போராட்டம்
காஞ்சுபோன செடிக்கு - தேவை
நிறைய நீரோட்டம்...
 
பாடல் செமையாக வந்திருப்பதாக ஆனந்துக்கு பூரண மகிழ்ச்சி. 
 
கே.வி.ஆனந்த் விளம்பரப் படங்கள் இயக்கிய காலத்தில் அமுதன் கிரியேடிவ் ஹெட்டாக பணியாற்றியிருக்கிறார். அப்போதே இருவரும் நல்ல நண்பர்களாம்.