புதுமையாக வெளிவரும் கத்தி பர்ஸ்ட் லுக்

Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (11:34 IST)
இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று முருகதாஸ் - விஜய்யின் கத்தி. ஏற்கனவே இவர்களின் துப்பாக்கி பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதால் கத்திக்காக விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் காத்திருக்கின்றன. 
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்து வரும் கத்தியை லைகா புரொடக்ஷனும், கருணாவின் ஐங்கரனும் இணைந்து தயாரிக்கின்றன. அனிருத்தின் இசை கத்தியின் ஸ்பெஷலாக இருக்கும் என்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜுன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடுவதாக முருகதாஸ் அறிவித்திருந்தார்.
 
துப்பாக்கி படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சுருட்டுப் பிடித்தபடி இருந்தது சர்ச்சையை கிளப்பியது. அப்படியெதுவும் நிகழாமல் இந்தமுறை கவனமாக இருக்கிறார்கள். தீம் மியூஸிக்குடன் கூடிய டிஜிட்டல் போஸ்டரை 22 -ம் தேதி வெளியிடுகிறார்களாம். தமிழில் இப்படியொரு போஸ்டர் இதுதான் முதல்முறை.
 
தீபாவளிக்கு கத்தி வெளியாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :