வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 7 ஜூன் 2014 (16:01 IST)

புதுப்பொலிவுடன் காமராஜ் திரைப்படம் - கர்ம வீரரின் பிறந்த நாளையொட்டி சிறப்புக் காட்சிகள்

கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறை காமராஜ் என்ற பெயரில் இயக்குனர் பாலகிருஷ்ணன் படமாக்கினார். 2004-ல் வெளியான இப்படம் பிற தலைவர்களின் வாழ்க்கை வரலாறைப் போலவே தமிழில் கவனம் பெறாமல் போனது. கர்ம வீரர் இப்போது காங்கிரஸ் கட்சிக்காரனுக்கும் தேவையில்லாத சமாச்சாரமாகிவிட்டார்.
காமராஜரின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு 30 நிமிடக் காட்சிகளை கூடுதலாக படத்துடன் சேர்த்திருக்கிறார்கள். மேலும், டிஜிட்டலில் படத்தின் பிரிண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 
 
புதுப்பொலிவுடன் தயாராகியிருக்கும் இப்படத்தை ஜுலை 1-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களிலும் திரையிட உள்ளனர். கர்ம வீரருக்கு மரியாதை செய்யும், அவரின் வாழ்க்கையை செலுலாயிடில் தரிசிக்கவும் இதுவொரு வாய்ப்பு. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.