வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: சனி, 14 ஜூன் 2014 (13:07 IST)

பிரேசில் படத்தில் ஹீரோவாகும் ஸ்டண்ட் மாஸ்டர்

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பிரேசில் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது.
விளையாட்டை மையப்படுத்திய படங்கள் இந்தியை தவிர்த்த பிற மொழிகளில் அவ்வப்போது வெளிவருவதுண்டு. லகான், சக் தே இண்டியா படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்தியில் விளையாட்டுக்கும், விளையாட்டு வீரர்களின் கதைக்கும் தனி மரியாதை கிடைத்து வருகிறது. 
 
ஆனால் தமிழில் இந்தப்போக்கு அரிதாகவே உள்ளது. எப்போதாவது ஒரு படம் விளையாட்டை மையப்படுத்தி வந்தால் அபூர்வம். சமீபத்தில் சுண்டாட்டம், வல்லினம் என சில படங்கள் வெளியாயின. ஆனால் எதுவும் ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை.
 
இந்நிலையில் அம்ஜத் என்பவர் பிரேசில் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். பிரேசில் என்றாலே கால்பந்துதான் நினைவுக்கு வரும். படத்தின் டேக் லைனிலும், தெருவிலிருந்து மைதானத்துக்கு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக, இது கால்பந்து விளையாட்டை மையப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. அஜீத்தின் மங்காத்தா, வீரம் தற்போது கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் ஆகியவற்றுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த சில்வா பிரேசிலில் நாயகனாகிறார்.
 
சில உதிரி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சில்வாவுக்கு நாயகனாக பிரேசில் முதல் படம்.