வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:21 IST)

பிரபுதேவாவின் சம்பளம் 30 கோடிகள்...?

இந்தியாவில் இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பிரபுதேவா என்றும் ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் 30 கோடிகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி நடன அமைப்பாளராக உயர்ந்து நடிகராகி இறுதியில் இயக்குனரானவர் பிரபுதேவா. அவர் இயக்கிய வான்டட் படம் இந்தியில் சூப்பர்ஹிட்டானது. அப்படம் தெலுங்கில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக் (தமிழில் விஜய் நடித்த அதே போக்கிரி).

அடுத்து அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் படத்தை இயக்கினார், அதுவும் ஹிட். அப்படம் தெலுங்கில் விக்ரமார்குடு என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக். தமிழில் அப்படம்தான் சிறுத்தை என்ற பெயரில் கார்த்தி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த இரு படங்களின் வெற்றியால் பிரபுதேவாவின் மார்க்கெட் இந்திப் படவுலகில் பல படிகள் உயர்ந்தன. அடுத்து ஸ்ருதி நடிக்க டி சீரிஸ் தொழிலதிபரின் மகனை வைத்து ராமையா வஸ்தாவையா படத்தை இயக்கினார். இது அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படத்தின் ரீமேக். இந்தப் படம் தமிழில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்..

அடுத்து ஷாகித் கபூர் நடிப்பில் ரா... ராஜ்குமார் வெளிவந்தது. பிரபுதேவா இயக்கிய முதல் நேரடி இந்திப் படம். படம் ப்ளாப். படத்தையும், பிரபுதேவாவையும் ஊடகங்கள் கழுவி ஊற்றின. என்றாலும் படத்தில் இருந்த மாஸ் வேல்யூ காரணமாக பிரபுதேவாவின் டிமாண்ட் பாலிவுட்டில் அப்படியே இருந்தது.

தற்போது அஜய்தேவ் கான் நடிப்பில் ஆக்ஷன் ஜாக்சன் படத்தை இயக்கி வருகிறவர் மீண்டும் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படம் இயக்கயிருக்கிறார். படத்துக்கு சிங் இஸ் பிளிங்க் என்று பெயர் வைத்துள்ளார்.
 
இந்தப் படத்துக்கு அவருக்கு சம்பளமாக பேசப்பட்டிருப்பது 30 கோடிகள் எனவும் 17 கோடிகள் அட்வான்ஸnக தரப்பட்டிருக்கிறது என்றும் மும்பையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக ரோஹித் ஷெட்டி இருந்தார். 20 கோடிகள் வாங்கிக் கொண்டிருந்த அவரை பிரபுதேவா முந்திவிட்டதாக கூறுகிறார்கள்.
 
உண்மையா என்பதை இன்கம்டாக்ஸ்காரர்கள்தான் சொல்ல வேண்டும்