வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:22 IST)

பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிப்பது முழுக்க வதந்தி

பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிக்கிறார், பாண்டிராஜ் சொன்ன கதை ஜோதிகாவுக்கும் சூர்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் பிடித்துவிட்டது. ஜோதிகா நடிக்க அவர்கள் சம்மதித்துவிட்டனர் என கடந்த சில தினங்களாக ஊடகங்கள் (நாம் அல்ல) செய்தி வெளியிட்டு வந்தன. அதன் உண்மை நிலவரம் என்ன?
 
ஜோதிகாவை நடிக்க வைக்க சிலர் முயன்றது உண்மை. ஆனால் பாண்டிராஜ் ஜோதிகாவை சந்திக்கவேயில்லை.

ஜோதிகா தற்போது யுஎஸ் ஸில் இருக்கிறார். அவரை பாண்டிராஜ் அணுகாதபோது எப்படி அவரது படத்தில் ஜோதிகா நடிக்க முடியும்?
 
இதுபற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு பாண்டிராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஜோதிகாவிடம் கதை கூறவில்லை என்பதை அந்த விளக்கத்தில் பாண்டிராஜ் உறுதி செய்துள்ளார். இணையத்தில் பார்த்தே இப்படியொரு தகவல் வெளியானதை தெரிந்து கொண்டேன் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் இந்த வதந்தியால் ஒரு நன்மை. பாண்டிராஜ் படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்ற செய்தியை ஊடகத்தில் பார்த்ததிலிருந்து, ஏன் நாம் ஜோதிகாவிடம் கதை சொல்லக் கூடாது என்று பாண்டிராஜுக்கு ஓர் ஆசை. ஜோதிகாவிடம் கதை சொல்லும் ஆர்வத்தை இந்த வதந்தி பாண்டிராஜை தூண்டியுள்ளது. அவர் கதை சொல்லி, ஜோதிகாவும் நடித்தால்...
 
கறை நல்லதுங்கிற மாதிரி வதந்தியும் நல்லதாகிவிடும்.