செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 11 ஜூன் 2014 (11:49 IST)

பத்து எண்றதுக்குள்ள... பெயரைப் போலவே வேகமெடுக்கும் விக்ரம் படம்

ஐ படம் வெளியாகும் முன்பே விஜய் மில்டனின் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் விக்ரம். ஒரு படத்துக்கு அவரும்தான் எத்தனை வருடங்களை செலவளிப்பார்.
விஜய் மில்டன் இயக்கும் படம் ஒரு ரோடு மூவி. விக்ரம், சமந்தா நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு வரும் 23 -ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. படத்தின் கிளைமாக்ஸை துருக்கியில் எடுக்கயிருப்பதாக விஜய் மில்டன் கூறினார்.
 
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இடம் மாறி இறங்கியவன் என்ற பெயர்தான் முதலில் பரிசீலிக்கப்பட்டது. பிறகு பத்து எண்றதுக்குள்ள என்று மாற்றியிருக்கிறார்கள் (லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கயிருக்கும் படத்துக்கு பெயர், எண்ணி ஏழு நாள்).
 
படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.