வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 4 ஜூன் 2014 (11:41 IST)

நாயகனாகும் அமலா - நாகார்ஜுன் மகன்

முன்னாள் நடிகை அமலாவின் மகன் அகில் அகினேனி விரைவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக மட்டுமே பரிமாண வளர்ச்சி கொள்ளும் காலமிது. திறமைக்கு மீறிய சம்பளம், தகுதிக்கு மீறிய புகழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம். 
முன்னாள் நடிகை அமலா நடிகர் நாகார்ஜுன் தம்பதியின் மகன் அகில் அகினேனி தமிழில் சுட்டிக்குழந்தை படத்தில் குழந்தையாக நடித்துள்ளார். இவரை நாயனாக்கும் முய்றசியாக கதைகள் கேட்டு வந்தார் நாகார்ஜுன். இந்நிலையில் இயக்குனர் தேவா கூறிய கதை அவருக்குப் பிடித்துவிடவே தேவா இயக்கத்தில் மகனை நாயகனாக்க முடிவு செய்துள்ளார்.
 
நாகார்ஜுனின் முதல் மனைவிக்குப் பிறந்த நாக சைதன்யா தெலுங்கின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவர். நாகார்ஜுனும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவரின் இளைய மகனும் நடிகராகிறார்.
 
சமீபத்தில் விக்ரம் கே.குமாரின் மனம் படத்தில் நாகார்ஜுனின் தந்தை நாகேஸ்வரராவ், நாகார்ஜுன், நாக சைதன்யா மூவரும் நடித்தனர். அதில் அகிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.