நானி திருமண நிச்சயதார்த்தம்

Webdunia|
FILE
நடிகர் நானியின் திருமண நிச்சயதார்த்தம் வைசாக்கில் நடந்தது. இந்த வருட இறுதியில் திருமணம் நடக்க உள்ளது.

வெப்பம் படம் மூலம் தமிழுக்கு வந்த நானிக்கு நான் ஈ தமிழகத்தில் நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது. கௌதமின் ‌நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்குப் பதிப்பில் ‌ஜீவா நடிக்கும் வேடத்தில் நானி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரும் வைசாக்கை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்‌ஜினியர் அஞ்சனாவும் காதலித்து வந்தனர். மீடியாக்கள் இதுபற்றி எழுதிய போதெல்லாம் வழக்கமான சினிமா நடிகராக அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து வந்தார். தற்போது அவரே அஞ்சனாவுடனான தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட இந்த விழா வைசாக்கில் நடைபெற்றது. வருட இறுதியில் இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :