செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (14:46 IST)

நஸ்ரியாவின் கடைசிப் படம் மே 9 வெளியாகிறது

நஸ்ரியா நசீம் நடித்த கடைசிப் படமான பெங்களூர் டேய்ஸ் மே 9 திரைக்கு வருகிறது.
தமிழ், மலையாளத்தில் நஸ்ரியா பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வேளையில் ஃபகத் பாசிலை காதலிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கணவரும், கணவரின் குடும்பமும், தனது குடும்பமும் சம்மதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நஸ்ரியா. 
 
நஸ்ரியா நடிப்பதற்கு ஃபகத் எந்த எதிர்ப்பும் கூறவில்லை. அதேநேரம் அவரது குடும்பத்தினர் நஸ்ரியா நடிப்பதை விரும்பவில்லை. ஒப்புக் கொண்ட படங்களை திருமணத்துக்கு முன் முடித்துவிடும்படி அவர்கள் நஸ்ரியாவை கேட்டுள்ளனர். கேட்டரிங் கிளாஸுக்கு சென்று சமையல் படித்து வருகிறார் நஸ்ரியா.
 

இவர் கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் அஞ்சலி மேனனின் பெங்களூர் டேய்ஸ். இந்தப் படத்தில் ஃபகத் பாசிலும் நடித்துள்ளார். துல்கர் சல்மான், நிவின் பாலி, நித்யா மேனன், பார்வதி ஆகியோரும் படத்தில் உண்டு. இந்தப் படம் மே 9 திரைக்கு வருகிறது.
அஞ்சலி மேனன் அன்வர் பஷீர் இயக்கிய உஸ்தாத் ஹோட்டல் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். இந்தப் படம்தான் தலப்பாகட்டு என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகிறது. விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிக்க நஸ்ரியாவைதான் கேட்டிருந்தனர். திருமணம் காரணமாக அவர் நடிக்க முடியாத நிலை.
 
அஞ்சலி மேனனின் முதல் படம் மஞ்சாடிக்குரு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. பெங்களூர் டேய்ஸ் அவரின் இரண்டாவது படம். அன்வர் ரஷீத்தே இப்படத்தை தயாரித்து உள்ளார்.
 
நஸ்ரியா முதலில் தமிழில் நடித்த திருமணம் என்கிற நிஹ்கா இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.