செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : புதன், 7 மே 2014 (17:46 IST)

நயன்தாராவை ஓவர்டேக் செய்த நஸ்ரியா

சென்னை பாக்ஸ் ஆபிஸில் நயன்தாராவின் நீ எங்கே என் அன்பே படத்தைவிட அதிகம் வசூல் செய்துள்ளது நஸ்ரியாவின் வாயை மூடி பேசவும். 

நீ எங்கே என் அன்பே இந்தி கஹானி படத்தி ரீமேக். தெலுங்கில் அனாமிகா என்று ரீமேக் செய்யப்பட்ட படத்தையே நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியிட்டுள்ளனர். இந்த ரீமேக்கை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா.
 
இந்த காரணங்களால் தமிழ் பார்வையாளர்கள் நீ எங்கே என் அன்பே படத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மே 1 வெளியான இப்படம் முதல் நான்கு தினங்களில் - வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு - 22.32 லட்சங்களை சென்னை சிட்டியில் வசூலித்துள்ளது.
 

அதேநேரம் நஸ்ரியா நடித்த வாயை மூடி பேசவும் படம் சென்ற வார இறுதியில் 21.3 லட்சங்களும் வார நாள்களில் 18 லட்சங்களும் வசூலித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த சென்னை சிட்டி வசூல் 64.2 லட்சங்கள்.
வடிவேலுவின் தெனாலிராமன் சென்ற வாரம்வரை சென்னை சிட்டியில் இரண்டு கோடியை வசூலித்துள்ளது. அதேநேரம் மான் கராத்தேயின் வசூல் 4.7 கோடிகள்.
 
என்னமோ நடக்குது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறினாலும் சென்ற வாரம்வரை இப்படம் 17 லட்சங்களைகூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.