வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2014 (16:34 IST)

நயன்தாராவுடன் நடிக்கும் ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் சரியான வாய்ப்புகள் அமையால் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டுவதும், காணாமல் போவதுமாக இருக்கிறார்.

பூவா தலையா படத்துக்குப் பிறகு ஷெரின் நாயகியாக நடித்து வரும் படம் மலேசியா நண்பர்கள். இயக்குனரும் தயாரிப்பாளருமான திருமலை மலேசியா நண்பர்களை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
 
தமிழில் தயாராகி வரும் இன்னொரு படத்திலும் நடித்துள்ளார் ஷெரின். படம் நண்பேன்டா.

அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி, நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது. இதில் முக்கியமான வேடத்தில் ஷெரின் நடித்துள்ளார். படத்துக்கு திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரம் அவருடையது என்று ஜெகதீஷ் கூறியுள்ளார்.
 
ஷெரினின் இந்த ரீ என்ட்ரி அவருக்கு மறுமலர்ச்சியை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.