நன்கொடையில் புத்ரன்

Webdunia|
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு சமூக கருத்துகளை மையமாக வைத்து படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் ஜெயபாரதி. இவர் ஏற்கனவே ஊமை ஜனங்கள், குடிசை, கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் தற்போது குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்பங்களை புத்ரன் என்ற படம் மூலம் சித்தரித்து காட்டியுள்ளார். சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தயாராகி இரண்டு வருடங்கள் கடந்த பின்னும் விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடப்பதால், கல்லூரி மாணவர்கள் மூலம் நிதி திரட்டி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் ஜெயபாரதி.
இதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :