செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2014 (15:47 IST)

த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவில் ஆனந்தி

பென்சில் படத்தில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அப்படம் முடிந்த பிறகே தொடர்ந்து நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார். ஆனால் விதி வேறு மாதிரி யோசித்தது. ஆதிக் என்பவர் சொன்ன கதை பிடிக்கவே பென்சில் வெளியாகும் முன்பே இரண்டாவது படத்தை கமிட் செய்தார். படத்தின் பெயர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.
இந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்கிறார். ஸ்ரீதேவியை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கிறது.
 
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷ் ஜோ‌டியாக நடிக்க கயல் படத்தில் நடித்து வரும் ஆனந்தியை அணுகியிருக்கிறார்கள்.

தெலுங்கில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தவர் ஆனந்தி. ஆந்திராவில் அவருக்கு வேறு பெயர். தமிழில் தனது கயல் படத்துக்காக ஆனந்தி என்ற புதிய பெயருடன் புதுமுகத்தைப் போல் அறிமுகப்படுத்தியுள்ளார் பிரபுசாலமன்.
 
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.