வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (14:46 IST)

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இலவச பயிலரங்கு

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் ஏப்ரல் 15 முதல் மே 14ஆம் தேதி வரை ஒரு மாத கால இலவச பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
 
இதில் டிஜிட்டல் விடியோகிராபி, டிஜிட்டல் போட்டோகிராபி, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன் (3டி), மல்டி‌மீடியா, எப்.சி.பி, அவிட், டிஜிட்டல் நான் லினியர் எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் இலவச பயிலரங்கம் நடைபெற உள்ளது.
 
ஒரு மாத கால பயிலரங்கில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி 10ஆம் வகுப்பு. இந்த பயிலரங்கிற்கு நேர்முக தேர்வு மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
 
நேர்முகத் தேர்வு ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
 
நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
 
மேலும் விவரங்களுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், மத்திய அரசு நிறுவனம், முதல்மாடி, கோ-ஆப்டெக்ஸ் கிடங்கு கட்டடம், 550, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரியிலும் 044-2819 2506, 2819 2407 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.