செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (19:13 IST)

தெனாலிராமன் படத்துக்கு தடைகோரி தெலுங்கு மக்கள் பேரவை வழக்கு

வடிவேலு நடித்திருக்ககும் தெனாலிராமன் படத்துக்கு எப்படியும் தடை வாங்குவது என்ற முனைப்பில் செயல்படுகின்றன தெலுங்கு அமைப்புகள். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பாக தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Vadivelu
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம் -
 
ஏ.ஜி.எஸ். நிறுவனம் நடிகர் வடிவேலு நடிப்பில் தெனாலிராமன் என்ற படத்தை தயாரித்துள்ளது.
 
அந்தப் படம் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம்..

அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராயரை தவறாக சித்திரிக்கவில்லை என பதில் அளித்தனர். ஆனால், படத்தின் நாயகனான வடிவேலு, கிருஷ்ணதேவராயராக தான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 
ஆனால், தணிக்கைச் சான்றிதழில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மாறுபட்டவையாக உள்ளன.
 
வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

அவர்களது சொந்தக் கருத்தில், உண்மை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர்.
 
மேலும் பட நிறுவனமும், இயக்குநரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, தெனாலிராமன் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும்.
 
- இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது