துப்பாக்கி நடிகையின் துள்ளி விளையாடு

Webdunia|
துப்பாக்கி ‌ரிலீஸுக்கு முன்புவரை வின்சென்ட் செல்வாவின் துள்ளி விளையாடு என்றுதான் இருந்தது. துப்பாக்கி அனைத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

விஜய்யை வைத்து ப்‌ரியமுடன், யூத் படங்களை தந்த வின்சென்ட் செல்வா துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிப்பவர் தீப்தி. நேற்றுவரை இவரை யாருக்கும் தெ‌ரியாது. ஆனால் இன்று...?

துப்பாக்கியில் விஜய்யின் மூத்த தங்கையாக நடித்திருப்பவர்தான் இந்த தீப்தி. இப்போதெல்லாம் துப்பாக்கி தீப்தி என்றுதான் இவரை குறிப்பிடுகிறார்கள். அப்படியே துப்பாக்கி தீப்தியின் துள்ளி விளையாடு.
துள்ளி விளையாடு காமெடி த்‌ரில்லர். யுவரா‌ஜ் என்பவர் ஹீரோ. பிரகாஷ்ரா‌ஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் செல்வாவின் ஃபேவ‌ரிட் ஸ்ரீகாந்த் தேவா இசை.

விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :