வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 15 மே 2014 (11:54 IST)

தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் குயின்

கங்கனா ரனவத் நடித்த இந்திப் படம் குயின் தமிழ், தெலுங்கில் ரீமேக்காகிறது. 

சமீபத்தில் வெளியான இந்திப் படங்களில் ரசிகர்கள், விமர்சகர்கள் இரு தரப்பையும் ஒருசேர கவர்ந்த படம் குயின். திருமணம் நடக்கயிருக்கும் கடைசி நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒரு கட்டுப்பெட்டி என்று மணமகன் ஓடிப்போகிறான்.

திருமணம் தடைபடுகிறது. அப்பாவின் பராமரிப்பு வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்து பழகிவிட்ட மணப்பெண் வாழ்க்கையில் முதல்முறையாக ஹனிமூனுக்கு எடுத்த பிளைட் டிக்கெட்டுடன் தனியாக வெளிநாடுக்கு கிளம்பி செல்கிறாள். அந்தப் பயணம் அவளை எப்படியொரு புது மனுஷியாக மாற்றுகிறது என்பதுதான் குயின் படத்தின் கதை. 
 

அனைத்துத் தரப்பினரையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.

எனது படம் இன்னொரு தரப்பு ஆடியன்ஸையும் சென்றடைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என இந்த ரீமேக் குறித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் படத்தை இயக்கிய Vikas Bahl.
 
கங்கனா ரனவத்துக்கு புகழை தேடித் தந்த படம் என்பதால் குயின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.