1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2014 (12:28 IST)

தனுஷின் வேலையில்லா பட்டதாரியை வாங்கிய ஐங்கரன்

தனுஷ் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் வாங்கியுள்ளது.
தனுஷ் இரு படங்களை தயாரித்து வருகிறார். சிவ கார்த்திகேயன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் டாணா, வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷே நடித்துவரும் வேலையில்லா பட்டதாரி. சிவ கார்த்திகேயனின் திடீர் பிரபலம் காரணமாக டாணா படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே அதன் தமிழக திரையரங்கு உரிமையை பெரும் தொகைக்கு ஐங்கரன் வாங்கியது. வேலையில்லா பட்டதாரியை சொந்தமாக வெளியிடுவதா, யாருக்கேனும் மொத்தமாக தந்துவிடுவதா என்ற யோசனையில் இருந்த தனுஷ் தனது வேலையில்லா பட்டதாரியையும் ஐங்கரனுக்கே தந்துள்ளார்.
 
வேலையில்லா பட்டதாரியை பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார். ஹீரோயின் அமலா பால். இசை அனிருத்.
 
இது தவிர பால்கியின் இந்திப் படம், வெற்றிமாறனின் சூதாட்டம், கே.வி.ஆனந்தின் அனேகன், பாலாஜி மோகனின் பெயரிடப்படாத படம் என மேலும் நான்கு படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.