வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 30 மே 2014 (11:10 IST)

தனுஷின் கால்ஷீட்டால் தவிக்கும் அனேகன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அனேகன் படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. கிளைமாக்ஸும், இரு பாடல் காட்சிகளும் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அதனை படமாக்கதான் இத்தனை தாமதம்.
இதுவரை அனேகனுக்காக 3 பாடல்களை படமாக்கி உள்ளனர். இனி இரண்டு பாடல்கள் படமாக்கப்பட வேண்டும். இரண்டுமே டூயட் பாடல்கள். தனுஷ், அமிரா தஸ்தூர் இருவரின் கால்ஷீட்டும் கிடைத்தால் மட்டுமே இந்தப் பாடல்களை படமாக்க முடியும். தனுஷ் பால்கியின் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். அமிரா மகேஷ் பட்டின் படத்தில் பிஸி. தனுஷின் கால்ஷீட் ஃப்ரீயாக இருந்தால் அமிரா பிஸி. அமிரா ஓய்வாக இருந்தால் தனுஷ் பிஸி. கடைசியில் ஒருவழியாக இரண்டு பேரின் கால்ஷீட்டும் வரும் ஜுன் இரண்டாம் தேதி முதல் ஒருசேர கிடைத்துள்ளது. 
மொத்தம் பதினைந்து தினங்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். அதில் ஒரு பாடல் காட்சியும் அடக்கம். அதற்காக பலநூறு ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலத்தையும் பார்த்து வைத்துள்ளது அனேகன் யூனிட். புதுச்சேரியில் படத்தின் கிளைமாக்ஸின் ஒருபகுதியையும் படமாக்குகின்றனர்.
 
இந்த பதினைந்து நாள் ஷெட்யூல்டுக்குப் பிறகு ஜுலை மாதத்தில்தான் தனுஷ், அமிராவின் கால்ஷீட் சேர்ந்தார்போல் கிடைத்துள்ளது. அந்த தேதியில் ஸ்காட்லாந்தில் மீதமிருக்கும் ஒரு பாடல் காட்சியையும், கிளைமாக்ஸையும் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஆனந்த்.
 
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் அனேகனை தயாரித்து வருகிறது.