வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: ஞாயிறு, 4 மே 2014 (17:05 IST)

தனது பெயரில் படம் எடுக்க சம்மதம் தந்த சிம்பு

வருடத்துக்கு தமிழில் 200 -க்கும் அதிகமான படங்கள் தயாராகின்றன. இந்த நெருக்கடியில் படம் எடுப்பதைவிட எடுத்த படத்தை ஜனங்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய சவால். படத்துக்கு வைக்கும் பெயரிலிருந்து உங்கள் கவனஈர்ப்பு கலையை காட்ட வேண்டும். 
மங்காத்தாவில் நடித்த மகத் ராகவேந்திராவின் புதிய படத்தின் பெயர் சிம்பு. அட, நடிகர் சிம்பு பெயரில் ஒரு படமா? ஆச்சரியம் வருகிறதல்லவா... அதுதான் கவன ஈர்ப்பு கலை. 
 
மகத் மங்காத்தாவின் மூலம் பிரபலமானவர். தாப்ஸிக்காக மோகன்பாபுவின் மகனிடம் உதை வாங்கியதில் மேலும் பிரபலமானார். அவர் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்குதான் சிம்பு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரை வைக்க சிம்புவிடம் அனுமதி கேட்ட போது உடனே சம்மதித்தவர், ஒரு காட்சியில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டாராம்.
 
இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்குப் படத்துக்கு பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் பெயரை வைத்துள்ளனர்.