தடுமாறும் தமன்னாவின் இந்திப் படம்

Webdunia|
FILE
தமன்னாவின் முதல் படம் இந்தி. படம் பிளாப்பானதால் தமிழுக்கு வந்தார். அறிமுகமான இந்தியில் எப்படியும் ஒரு நல்ல இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அவா, அவாளின் உள்ளே கனன்று கொண்டிருந்தது. அதற்கு தகுந்தபடி கிடைத்தது ச‌ஜித் கானின் ஹிம்மத்வாலா.

முன்பு ஸ்ரீதேவி இதேபெய‌ரில் நடித்த படத்தைதான் மீண்டும் ‌ீமேக் செய்தனர். ஹீரோ அஜய் தேவ்கான், ஹீரோயின் தமன்னா, மக்களின் இயக்குனர் என்று சொல்லிக் கொள்ளும் ச‌ஜித் கான் இயக்கம்.

படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை ஹிம்மாத்வாலா பரபரப்பின் உச்சியில் இருந்தது. வெளியான பிறகு...?
ச‌ஜித் கானுக்கு ஓவர் கானஃபிடென்ஸ், கொஞ்சமா ஐக்யூ வைத்து ஓவரா ஆட்டம் போடுற ஆள் என்று ஆளாளுக்கு அடித்துவிடுகிறார்கள். பிரபல பத்தி‌ரிகைகளில் ரொம்ப யோசித்து ஒன்றரை ஸ்டார் தந்திருக்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் 31 கோடியை வசூலித்தாலும் வார நாட்களில் படம் படுத்துவிடும் என்பது கன்ஃபார்ம் என்கிறார்கள் இந்திப்பட உலகில்.
ூறு கோடி படத்தை எதிர்பார்த்த தமன்னாவுக்கு இது பேரதிர்ச்சி.


இதில் மேலும் படிக்கவும் :