ஜூன் 20 சிகரம் தொடு ரிலீஸ்

Last Modified புதன், 23 ஏப்ரல் 2014 (11:41 IST)
விக்ரம் பிரபு நடித்து வரும் சிகரம் தொடு படம் ஜூன் 20 திரைக்கு வருவதாக படத்தை தயாரித்துவரும் யுடிவி அறிவித்துள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் அரிமா நம்பி படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து முடிவடையும் கட்டத்தில் இருக்கும் படம் சிகரம் தொடு. தூங்காநகரம் கௌரவ் இயக்கி வரும் இப்படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்த நிலையில் இரு பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளன. விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடித்துள்ளார்.
 
படத்தின் பெயருக்கு ஏற்ப உயர்ந்த மலை சிகரங்களில் முக்கிய காட்சிகள் சிலவற்றை படமாக்கியுள்ளனர். இரு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதால் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இப்போதே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. 
 
ஜூன் 20 படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :