வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 4 ஜூன் 2014 (17:23 IST)

ஜுன் 27 வெளியாகும் விஜய்யின் சைவம்

திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் விஜய்க்கு கடைசியில் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அவரது சைவம் படத்தை ஜூன் 27 வெளியிடுவது என முடிவு செய்துள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட்.
பெரிய ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்கள் எடுத்து வந்த விஜய் அதிலிருந்து விலகி குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்கும் படம் சைவம். தாத்தா, பேத்தி உறவை மையமாக வைத்து நாம் இழந்துவரும் கிராமத்து வாழ்க்கையை இந்தப் படம் காட்சிப்படுத்தியுள்ளது. பேபி சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்க நாசரின் மகன் அவரது பேரனாக நடித்துள்ளார்.
 
பட்ஜெட் குறைவு என்றாலும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விஷயத்தில் விஜய் தாராளமாகவே இருந்துள்ளார். இசை ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு நீரவ் ஷா என்று எல்லோருமே படா டீம். 
 
சைவம் படத்தைப் பார்த்த உதயநிதி அதன் தமிழக திரைப்பட உரிமையை வாங்கினார். படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதுவும் இப்போது முடிவாகிவிட்டது. ஜூன் 27 வெளியிடுகிறார்கள்.