வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (19:17 IST)

ஜனநாயக கடமையை சரிவர ஆற்றுங்கள் - கமல், கௌதமி பிரச்சாரம்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் வேட்பாளர்கள் என்றால் இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் தங்களின் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. அனைவரையும் ஓட்டு போட வைக்க வேண்டும், பணம் வாங்கி ஓட்டுப் போடுவதை தடுக்க வேண்டும். இவை இரண்டும் தேர்தல் ஆணையத்தின் தலையாய இரு சவால்கள். இதற்காக கமல், கௌதமி, ரோகிணி ஆகியோர் பங்கேற்ற விளம்பரப் படங்களை பயன்படுத்துகின்றனர்.
 
மத்திய சென்னையில்தான் கடந்தமுறை மிகக்குறைவான வாக்குப் பதிவு நடந்ததாம். இந்தத் தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், யாருக்கு நாம் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் எந்திரம் வைக்கப்பட உள்ளது. ஓட்டு போட்ட ஏழு வினாடிகள் கழித்து இந்த எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால் நமது ஓட்டு எந்த சின்னத்துக்கு பதிவாகியுள்ளது என்பதை அறியலாம். இந்த புதிய எந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை.
 
இதற்காக பிரச்சார வாகனம் ஒன்றை தயார் செய்துள்ளனர். இதிலிருக்கும் டிறாட்டல் திரையில் கமல், கௌதமி, ரோகிணி ஆகியோhpன் குரலில், ஜனநாயக கடமையை சரிவர ஆற்றச் சொல்லும் தேர்தல் ஆணைய விளம்பரம் ஒளிப்பரப்பாகும். வாகனத்தில் உள்ள, யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் எந்திரத்தையும் பொதுமக்கள் பார்த்து அதனை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
 
இந்த வாகன பிரச்சாரத்தை தேர்தல் அதிகாரி அருண் சுந்தர் தயாள் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.