1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (19:28 IST)

செல்வராகவன் படத்தில் சிம்பு, த்ரிஷா

செல்வராகவன் படத்தில் சிம்புவுடன் த்ரிஷா நடிக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக இப்படம் உருவாகிறது.
 
இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதில்லை, பிரமாண்ட படங்களை தற்சமயம் இயக்குவதில்லை என பல்வேறு தீர்மானங்கள் எடுத்தார் செல்வராகவன். குறைவான பட்ஜெட்டில் குறுகியகால தயாரிப்பில் படம் இயக்க வேண்டும் என்பதே இப்போது அவரது நோக்கம்.
 
செல்வராகவனின் புதிய படம் ஏப்ரல் 25 தொடங்குகிறது. சிம்பு நாயகனாக நடிக்கும் இதில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு, த்ரிஷா ஜோ‌டி திரையுலகின் வெற்றி ஜோ‌டியாகிவிட்டது.
 
புதுப்பேட்டைக்குப் பிறகு இரு திசைகளில் பயணிக்க ஆரம்பித்த செல்வா, யுவன் கூட்டணி மீண்டும் இந்த புதிய படத்தில் இணைகிறது. ஒளிப்பதிவு மது அம்பட்.
 
தற்போது பாண்டிராஜ், கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோரின் படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.