வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : புதன், 14 மே 2014 (11:47 IST)

சூர்யா - வெங்கட்பிரபு படத்தில் எமி ஜாக்சன்

ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். 

மதராசப்பட்டணத்தில் இயக்குனர் விஜய்யால் கண்டெடுக்கப்பட்டவர் எமி. கொள்ளை அழகு என்பதற்கு எமி உதாரணம். தாண்டவம், ஐ என்று சொற்ப படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அவர் அடுத்து சூர்யாவுடன் நடிக்கிறார்.
 

 
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்தப் படத்துக்கு இசை யுவன். சூர்யாவுடன் நயன்தாரா நடிக்கிறார். ஆதவன் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இந்தப் படத்தில்தான் ஒன்றிணைகிறார்கள்.
 
வெங்கட்பிரபு படமென்றால் ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் இருப்பார்கள். இதிலும் அப்படியே. நயன்தாராவுடன் எமி ஜாக்சனையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
கடவுளே... எமி ஜாக்சன் பிரேம்ஜிக்கு மட்டுமே ஜோடியாக இருந்துவிடக் கூடாது.