1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 26 ஜூன் 2014 (17:41 IST)

சூடாகும் ஜில் ஜிகிர்தண்டா

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டா எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் படம் சம்பந்தப்பட்டவர்களே தடுமாற்றத்தில் உள்ளனர்.
சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதை. லட்சுமி மேனன் ஹீரோயின். கருணாகரன், சிம்ஹா போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீட்சா படத்தை இயக்கியவரின் படம் என்பதால் ஜிகிர்தண்டா ஆரம்பிக்கப்பட்ட போதே இயல்பாக ஒரு எதிர்பார்ப்பு இருந்து. படத்தின் ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. 
 

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில் சென்ற மாத இறுதியிலேயே படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் ரிலீஸ் தேதியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த தாமதத்துக்கு பல காரணங்களை கூறுகின்றனர். படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகிறது.
யு சான்றிதழ் கிடைத்தப் படங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை. யுஏ என்றால் 30 சதவீத வரிச்சலுகையை இழக்க நோரிடும். ஜிகிர்தண்டா போன்ற படங்களைப் பொறுத்தவரை அது பேரிழப்புதான். சென்சார் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்கச் சொல்கிறார் தயாரிப்பாளர். ஒரு க்ரியேட்டராக அதற்கு சம்மதிக்க கார்த்திக் சுப்பாராஜால் முடியவில்லை.
 
இந்த குழப்பம் காரணமாக நாளுக்குநாள் ஜில் ஜிகிர்தண்டா ஹாட்டாக மாறிக் கொண்டிருக்கிறது.
 
முழுசா உருகுவதற்கு முன் படத்தை வெளியிடுங்க பாஸ்.