வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 31 மே 2014 (10:28 IST)

சிம்புதேவன் படம், விஜய் ஜோ‌டி ஹன்சிகா

கத்தி படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோ‌டியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
சிம்புதேவன் விஜய்யை வைத்து இயக்கும் படம் ஒரு ஃபேண்டஸி கதை. அதில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சுதீப்பை பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய் ஜோ‌டியாக நடிக்கப் போவது யார் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்தது. தீபிகா படுகோன், ஸ்ருதி உள்பட பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. 
இந்நிலையில் கடைசியாக கிடைத்திருக்கும் தகவல், விஜய் ஜோ‌டியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இது குறித்து தயாரிப்பு தரப்போ, இயக்குனர் சிம்புதேவனோ இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.