சிம்புதேவனின் ஃபேண்டஸி - ராணியாக ஸ்ரீதேவி, வீரனாக விஜய்...?

Geetha Priya| Last Modified வெள்ளி, 13 ஜூன் 2014 (16:31 IST)
கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படம் சிம்புதேவனின் வழக்கமான ஸ்டைலில் சரித்திர ஃபேண்டஸி படமாக உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். வில்லனாக கன்னட நடிகர் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆறு கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி கௌரி ஷிண்டே இயக்கத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தார். படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அதன் பிறகு பல மொழிகளிலிருந்து நடிக்க அழைப்பு வந்தும் அவர் ஏற்கவில்லை. கணவர் போனி கபூரின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க நடிக்க அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் சிம்புதேவனின் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கதைப்படி அவர் ராணியாகவும், விஜய் அவரை காப்பாற்றும் வீரனாகவும் நடிக்கயிருப்பதாக படயூனிட்டிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
 
கத்தி முடிந்ததும் சிம்புதேவனின் படம் ஆரம்பமாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :