வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 9 மே 2014 (18:05 IST)

சிக்கலில் லிங்கா பட‌ப்‌பிடி‌ப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் படம் லிங்கா கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயில் தயாராகும் மிகப் பிரம்மாண்டமான இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். 
மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோவிலில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த வேளையில்தான் சிக்கலில் மாட்டியிருக்கிறது லிங்கா. கர்நாடகாவில் இனி ஒரு நிமிஷம் கூட ரஜினியின் பட சூட்டிங்கை நடத்த விடமாட்டோம் என்று போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள் கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே அமைப்பினர். 
 
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை திறந்து விடமாட்டோம் என்று நாங்கள் எதிப்பு தெரிவித்த நேரத்தில், தண்ணீர் தராத கன்னடக்காரர்களை உதைக்க வேண்டாமா..? என்று கேட்ட ரஜினியின் படப்பிடிப்பை நடத்த எங்கள் ஊரில் எப்படி அனுமதிப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இதனால், இந்த அமைப்பின் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர் தயாரிப்பாளர் தரப்பினர்.