கௌதம் கார்த்திக் ஜோடி லாவண்யா த்ரிபாதி

FILE

தங்கமீன்கள் படத்தை தயாரித்த கௌதம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்து வருகிறார். ஒரு வருடத்துக்கு மேல் அண்டர் புரொடக்சனில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் இருக்கிறது. அந்தப் படம் எப்போது முடியும், எப்போது வெளியாகும் என்பது தெ‌ரியாத நிலையில் அடுத்த தயாரிப்பை தொடங்குகிறார். படத்தின் பெயர் நானும் ரவுடிதான்.

தலைநகரம் படத்தில் வடிவேலுவால் பிரபலமான நானும் ரவுடிதான் வாசகத்தையே படத்துக்கு பெயராக சூட்டியுள்ளனர். போடா போடி படத்தை இயக்கிய விஷ்ணு சிவன் இயக்கம். கௌதம் கார்த்திக் ஹீரோ. அவருக்கு ஜேhடியாக நடிப்பவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் ஹிட்டான அந்தால ராட்சஸி படத்தில் அறிமுகமான இவர் தற்போது பிரம்மன் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து வருகிறார்.

Webdunia|
கௌதம் வாசுதேவ மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
நானும் ரவுடிதான் படத்தில் லாவண்யா காதுகேளாத பெண்ணாக வருகிறார் தை திங்கள் முதல் நாள் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :