1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:36 IST)

கோவாவில் ஆர்யா, ஹன்சிகா

மீகாமன் படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதிவரை நடக்கும் கோவா ஷெட்யூ‌லில் ஆர்யா, ஹன்சிகா இருவரும் நடித்து வருகின்றனர்.
தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனியின் இரண்டாவது படம் மீகாமன். ஆர்யா நடிக்கும் ஆக்சன் படம் இது. மொத்தம் 7 வில்லன்கள் படத்தில் இருக்கின்றனர். இவர்களுடன் ஆர்யா மோதி ஜெயிப்பதை வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லவுள்ளனர்.
 
குளுகுளு கோவை ஷெட்யூல் முடிந்ததும் சுடச்சுட சென்னையில் ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த ஷெட்யூலுடன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிவுக்கு வரும். ஜூனில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 
எல்லாம் ஓகே. திமிங்கலத்தையே கருவாடக்கிற சென்னை வெயிலில் ஹன்சிகாவை எப்படி நடிக்க வைக்கப் போகிறார்கள்?