வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 3 மே 2014 (18:29 IST)

கோலிசோடாவால் ஹீரோ அந்தஸ்து பெற்ற பசங்க

கோலிசோடா இன்று வெற்றிகரமாக 100-வது நாளை நிறைவு செய்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் ஐம்பது நாளை தாண்ட திக்கி திணறுகையில் காசு கொடுத்து ஓட்டாமலே இந்த பசங்க செஞ்சுரி அடித்திருக்கிறார்கள்.
இந்த வெற்றியின் பலன்களை அப்படத்தில் நடித்த ஸ்ரீராமும், கிஷோரும் அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
 
பசங்க படத்தில் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர்கள் பதினெட்டு வயதை எட்டிப் பிடித்துள்ளனர். வயசுடன் கோலிசோடாவின் வெற்றியும் சேர்ந்து கொள்ள இவர்கள் இருவருக்கும் நல்ல வரவேற்பு. இவர்கள் இருவரையும் ஹீரோவாக வைத்து கமர்கட்டு என்ற படத்தை தொடங்கி உள்ளனர். இந்தப் படத்தை இயக்குகிறவர் எஸ்ஏசி ராம்கி.
 
ஸ்ரீராமின் தந்தை சிவராமகிருஷ்ணன் தனது மகனை வைத்து தரை டிக்கெட் என்ற படத்தை எடுக்கிறார். இதுதவிர, இந்த படத்தை பார்க்காதீங்க என்ற படத்திலும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் ஸ்ரீராம்.
 
இந்த வாய்ப்பு மழைக்கெல்லாம் குளிர் மேகமாக இருந்தது கோலிசோடா என்றால் மிகையில்லை.