வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: சனி, 31 மே 2014 (10:25 IST)

கும்பகோணத்தில் ஜோ‌டியாக ஆடப்போகும் சிம்பு, நயன்தாரா

சில வாரங்கள் தடைபட்ட இது நம்ம ஆளு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. நான்குநாள் ஷுட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
சிலர் கூறியது போல் படத்தின் தொண்ணூறு சதவீதம் எல்லாம் முடியவில்லை. எழுபது சதவீத படமே இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. சில பாடல் காட்சிகள், முக்கியமான வசனக் காட்சிகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதில் ஒரு பாடல் காட்சியை வரும் ஜுன் 6 ஆம் தேதி முதல் படமாக்குகிறார்கள்.
 
குறிப்பிட்ட பாடல் காட்சியை படமாக்க சிம்பு - நயன்தாரா உள்ளிட்ட யூனிட் கும்பகோணம் செல்லவுள்ளது. அங்குதான் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். படத்துக்கு இசையமைப்பது சிம்புவின் தம்பி குறளரசன்.
 
இது நம்ம ஆளு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸுக்காக முதல் காப்பி அடிப்படையில் இயக்குனர் பாண்டிராஜே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.