வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : புதன், 7 மே 2014 (14:09 IST)

குத்துச் சண்டை கற்கும் நமிதா

உடல் எடையை குறைக்க வெஜிடரியனுக்கு மாறிவிட்டார், யோகா கற்கிறார் என்று நமிதா பற்றி பல செய்திகள். விழாக்களுக்கு வரும் அவரைப் பார்த்தால் மேலே உள்ள எதையும் அவர் நடைமுறைப்படுத்தியது போல் தெரியாது. கடந்த சில வருடங்களாக அதே கும்மென்ற தோற்றத்தில்தான் நமிதா இருக்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அவர் குத்துச் சண்டை கற்பதாக பேச்சு. அதனை நமிதாவும் ஒப்புக் கொண்டார்.
கடந்த மூன்று மாதங்களாக குத்துச் சண்டை கற்று வருகிறேன். உடம்பை ஃபிட்டாகவும், ஷேப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவே குத்துச் சண்டை கற்கிறேன். படத்தில் நடிப்பதற்காக இதனை கற்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை என்று கூறினார்.
 

ஒலிம்பிக்கில் மெடல் வென்ற தேசிய சாம்பியன்தான் நமிதாவுக்கு குத்துச் சண்டை சொல்லித் தருகிறார்.
எல்லாம் சரி, நமிதாவை மீண்டும் திரையில் பார்ப்பது எப்போது?
 
நான் நடிக்கும் புதிய படம் இந்த மாதம் தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்சன் படம் இது என்றார்.
 
ஸ்டண்ட் நடிகர்கள் நமிதாவிடம் குத்து வாங்க தயாராகிக் கொள்ளுங்கள்.