குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கார்த்தி

Ravivarma| Last Modified சனி, 24 மே 2014 (15:32 IST)
குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார் கார்த்தி.
அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் காளி படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. வடசென்னையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறவர் கேத்ரீன் தெரேசா. காளி என பெயர் வைக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் பெரும் விபத்தை சந்தித்துள்ளன. அதன் காரணமாக காளி என்பதை கபாலி என மாற்றியதாக கூறப்பட்டது.

தற்போது, மெட்ராஸ் என பெயரை மாற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இயக்குனரோ, படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனோ இந்த தகவல்களை இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்தப் படத்துக்குப் பிறகு குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் நடிக்க கார்த்தி கால்ஷீட் தந்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே
கதை சொல்லி நடிப்பதற்கு அவரின் சம்மதத்தை பெற்றிருந்தார் முத்தையா.

இந்தப் படத்தையும் ஸ்டுடியோ கிரீனே தயாரிக்கும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :