வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:31 IST)

கவர்ச்சிப் படங்களை வெளியிட்டவர் மீது வழக்கு - ஸ்ருதி

ஸ்ருதி நடித்த ரேஸ் குர்ரம் படம் வெளியான நேரத்தில், அப்படத்தின் படங்கள் என்று நீல காஸ்ட்யூமில் அவர் நடனமாடும் சில படங்கள் வெளியிடப்பட்டன. படு கவர்ச்சியாக இருந்த அந்தப் படங்கள் பார்த்தவர்களை மட்டுமின்றி ஸ்ருதியையும் அதிர்ச்சியடைய வைத்தது.
காரணம், அப்படங்கள் ரேஸ் குர்ரம் படத்தினுடையவை அல்ல. அதற்குமுன் ஸ்ருதி நடித்த யவடு படத்தின் பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்டவை.

பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் கவர்ச்சியாக இருந்ததால் விளம்பரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டவை. அவை திடீரென எப்படி இணையத்தில் வெளியானது?

 
இது பெரிய சதி என்கிறார் ஸ்ருதி. படங்களை வெளியிடப்பட்டது தொடர்பாக புகார் தரவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் யார் அந்தப் படங்களை இணையத்தில் வெளியிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.