1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (19:39 IST)

கமலை இயக்கும் தெலுங்கு இயக்குனர்...?

சமீபத்தில் கமல்ஹாசனை தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான தர்மா தேஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேஜா விரைவில் கமலை இயக்கப் போகிறார் என்ற பேச்சு ஹைதராபாத்தில் எழுந்துள்ளது.
 
ஜெயம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தேஜா. உதவி இயக்குனராக பணியாற்றி, நடிகராக சினிமாவில் நுழைந்து கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர். இவர் சமீபத்தில் கமலை சந்தித்துப் பேசினார். 
 
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஏதாவது கூறியிருந்தால் இப்படியொரு கேள்வி எழுந்திருக்காது. ஆனால் தேஜா அதற்கு மாறாக, நாங்கள் எது குறித்து பேசினோம் என்பதை இப்போதே சொன்னால் சரியாக இருக்காது என கழுவுற மீனில் நழுவுற மீனாக ஒரு பதிலை அளித்தார். 
 
மேலும், கமலை வைத்து படம் இயக்க ஆவலாக இருப்பதாகவும் கூறினார். இந்த இரண்டையும் சேர்த்து வாசித்து, தேஜா இயக்கத்தில் கமல் நடிப்பார் என் ஹைதராபாத்தில் செய்தி கசியவிட்டுள்ளனர்.