கன்னடத்தில் தயாராகும் இவன் வேற மாதிரி

Ravivarma| Last Modified திங்கள், 19 மே 2014 (19:55 IST)
சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுரபி நடித்த இவன் வேற மாதிரி கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.
கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, நிறைய த்ரில், நிறைய ஆக்சன் என்று இந்தியாவின் எந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படும் சாத்தியத்துடன் வெளியான படம் இவன் வேற மாதிரி. சரவணன் இயக்கிய இந்தப் படம் தமிழில் மோசமில்லத வெற்றியை பெற்றது. இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது.
 
இந்த ரீமேக்கையும் சரவணனே இயக்க உள்ளார்.
 
தற்போது ஜெய் நடிக்கும் படத்தில் சரவணன் பிஸி. அது முடிந்ததும் நவம்பரில் கன்னட ரீமேக் ஆரம்பமாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :