கத்தியில் விஜய்யின் காதல் குத்து

Geetha priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (15:10 IST)
கொலவெறி பாடலின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற வெறியில் கத்தி படத்தின் பாடல்களை உருவாக்கி வருகிறார் அனிருத். எல்லா இசையமைப்பாளர்களையும் போல் தனது இசையில் விஜய்யை பாட வைக்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு உள்ளது.
ஆரம்பகால விஜய் படங்களில் அவர் பாடிய பாடல் இடம்பெறும். அந்தப் பாடல் திரையில் வரும்போது, இந்தப் பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற எழுத்துக்கள் திரையில் பளீரிடும். மகனை அப்படிதான் தமிழக மக்களிடம் கஷ்டப்பட்டு கொண்டு சேர்த்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 
 
நடுவில் படங்களில் பாடுவதை விஜய் தவிர்த்தார். 7 வருடங்களுக்குப் பிறகு ஹாரிஸ் இசையில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். பாடல் சூப்பர்ஹிட். அதனைத் தொடர்ந்து தலைவா, ஜில்லா என்று விஜய் தொடர்ந்து பாடினார். அனிருத்துக்கு மட்டும் வஞ்சகமா செய்யப் போகிறார். கத்தி படத்திலும் ஒரு பாடலை பாடவிருக்கிறார்.
 
இந்தப் பாடல் அனிருத்தின் ஸ்பெஷல் குத்துப் பாடல். அதேநேரம் காதலைப் பற்றியது. ட்யூனை மெருகேற்றும் இறுதிக்கட்ட பணியிலிருக்கிறார் அனிருத். இந்த வாரமே விஜய் குரலில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படலாம் என்கிறது படயூனிட்.
 
கத்தியின் பர்ஸ்ட் லுக் ஜுன் 22 விஜய் பிறந்தநாளில் வெளியாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :