வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 8 மே 2014 (13:26 IST)

கதையு‌ம் இரு‌க்‌கிறது - ச‌ந்தான‌ம் பட இய‌க்குன‌ர்

காமெடி நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்லின் தனது படங்களில் வயிறு குலுங்க வைக்கும் காமெடியோடு, ஒரு அழுத்தமான கதையும் இருக்கும். 
அதைப்போல, இது முழுக்க காமெடி படமாக இருந்தாலும்.. ஒரு அழகான, எல்லோருக்கும் பிடித்தமான கதை இருக்கிறது என்கிறார். படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத். தெலுங்கில் வெளியாகி வசூலைக் குவித்த படமான மரியாதை ராமண்ணா கதையை இந்த காலத்திற்கு ஏற்றா‌ற்போ‌ல் சின்னச் சின்ன மற்றங்கள் செய்யப்பட்டு எடுத்து வருகிறோம். 
 
குஜராத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த ஆஷ்னா ஜாவேரியை இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் செய்திருக்கிறோம். ஒரு வெற்றிப் படத்துக்கான அத்தனை விஷயங்களும் இதில் செய்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.