வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (18:12 IST)

ஒருநாள் முன்னதாக வெளியாகும் அஞ்சான் ஃபர்ஸ்ட்லுக்

அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 1 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இப்போது திடீரென ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30ஆம் தேதியே ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட உள்ளனர்.
இதற்கு காரணம் அஜீத் - சூர்யா இடையிலான பனிப்போர் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
 
கௌதம் படத்திலிருந்து சூர்யா விலகியதும் கௌதமை தேடிச் சென்று வாய்ப்பளித்தார் அஜீத். இத்தனைக்கும் அவர் கதை எதுவும் கேட்கவில்லை. சூர்யா கௌதமை நட்டாற்றில் விட்டதன் காரணமாகவே அஜீத் கௌதமுக்கு வாய்ப்பு தந்ததாக கோடம்பாக்கம் உரக்கவே கிசுகிசுக்கிறது.
 
மே 1 அஜீத்தின் பிறந்தநாள். சில ஊடகங்கள் அஜீத்தின் பிறந்தநாளில் அஞ்சான் ஃபர்ஸ்ட்லுக் என்று எழுதியது சூர்யாவை ரொம்பவே கடுப்பேற்றியிருக்கிறது. அதன் காரணமாகவே ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30 ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர் என விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.