வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (11:54 IST)

ஒத்துழைக்கும் சமந்தா

ஓரிரு படங்களில் நாயகியாக நடித்தவர்கள் கூட ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு இயக்குனரையும், படக் குழுவினரையும் பாடாய் படுத்தும் நடிகைகள் மத்தியில் சொல்வதை புரிந்து கொண்டு, போட்ட முதலீடு திரும்ப வரவேண்டும் என்பதற்காக கொஞ்சம் கிளாமர் ’காஸ்டியூம்’ கொடுத்தாலும் மனம் கோணாமல் போட்டுக் கொள்கிறார் நடிகை சமந்தா.

சமீபத்தில் சூர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ’அஞ்சான்’ அதில் கொஞ்சம் கவர்ச்சியான உடைகளில் வருகிறார்.

’ஆரம்பத்தில் அந்த மாதிரியான காஸ்ட்டியூம் அணியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள்தான் நானும். காலத்திற்கேற்ப சினிமாவும் மாறுகிறது. அதை போல தன்னையும் மாற்றிக் கொள்வதில் தப்பில்லை. அதிலும், ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டக் கூடாது என்பதிலும் கவணமாக இருக்கிறேன். பணம் கொடுத்து தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் மேலும் குறைந்து விடக் கூடாதில்லையா..?’ என்கிறார் பிழைக்கத் தெரிந்த சமந்தா.